sivakarthikeyan conduct game prize is drinks
சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் அணைத்து படங்களுக்கும் ரசிகர்கள் தங்களுடைய ஆதரவை கொடுத்து வருகின்றனர். காரணம் அவர் படங்கள் என்றாலே காமெடி காட்சிகளுக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இருக்காது.
அந்த வகையில் தற்போது மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ரோபோ ஷங்கருடன் இணைத்து காமெடி களத்தில் குதித்துள்ளார்.
இந்த படத்தில் ஒரு காட்சியில் குடிமகன்களை கலாய்க்கும் வகையில் ஒரு போட்டி வைக்கிறார்களாம். அதாவது காலையில் மதுபானக் கடை திறந்ததும் யார் முதல் ஆளாக சரக்கு வாங்கிவிட்டு வருகிறார்களோ அவர்களுக்கு பத்து சரக்கு பாட்டில்கள் இலவசம், இதுதான் அந்த போட்டி.
இந்த போட்டி காட்சிகளை படக்குழு மிகவும் காமெடி நிறைந்த வண்ணம் எடுத்துள்ளார்களாம். இதில் சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் காமெடி மிக பெரிய அளவில் பேசப்படும் என கூறப்படுகிறது.
