- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!
சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் சன் டிவியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்தாலும், அதில் உள்ள மிகப்பெரிய லாஜிக் மிஸ்டேக் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Logic Mistake in Ethirneechal Thodargiradhu Serial
சன் டிவியில் பிரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல். இந்த சீரியலை திருச்செல்வம் இயக்குகிறார். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி எதிர்நீச்சல் தொடர்கிறது என்கிற பெயரில் இரண்டாவது பாகத்தை தொடங்கினர். இந்த சீரியல் தொடங்கிய சில மாதங்கள் பெரியளவில் சோபிக்காமல் இருந்தது. ஆனால் தர்ஷன் திருமண எபிசோடில் இருந்து இந்த சீரியல் பிக் அப் ஆக தொடங்கியதோடு, டிஆர்பி ரேஸிலும் டாப் 5 ஸ்பாட்டுக்குள் நுழைந்தது. இந்த சீரியல் தற்போது ஓராண்டு நிறைவு செய்துள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
இந்த நிலையில், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் தற்போதைய கதைக்களத்தில் மிகப்பெரிய லாஜிக் மிஸ்டேக் உள்ளது. தற்போது ஜனனி கொடுத்த புகாரின் பேரில் ஆதி குணசேகரனை குண்டாஸில் கைது செய்ய போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். ஆனால் அவரோ போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து தப்பித்து வருகிறார். ஆதி குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் பயன்படுத்தும் போன்களை கொற்றவை தலைமையிலான போலீஸ் டீம் டிராக் செய்து வருவது போல் டைரக்டர் காட்டினாலும் அதில் தான் மிகப்பெரிய லாஜிக் மிஸ்டேக்கே ஒளிந்திருக்கிறது.
லாஜிக் மிஸ்டேக் என்ன?
ஆதி குணசேகரனுக்கு வீட்டில் நடக்கும் எல்லா விஷயங்களையும் உடனுக்குடன் அப்டேட் செய்யும் வேலையை அறிவுக்கரசி செய்து வருகிறார். இந்த விஷயம் ஜனனிக்கே தெரியும். அவரின் போனை டிராக் செய்தாலே ஆதி குணசேகரன் எங்கு இருக்கிறார் என்பதை ஈஸியாக கண்டுபிடித்துவிடலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு தலையை சுற்றி மூக்கை தொடுவது போல் திரைக்கதையை கொண்டு செல்கிறார்கள். இதில் பற்றாக்குறைக்கு ஆதி குணசேகரன் எங்கு தப்பிச் சென்றாலும் அவர் போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆவதுபோல் ஒரு காட்சி வேறு வைத்துக் கொள்கிறார்கள்.
கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
ஆதி குணசேகரனுக்கு செல்லும் இடமெல்லாம் ஏதாவது ஒரு போலீஸ் உதவுகிறார். அப்படி இருக்கையில் அவர் ஏன் போலீசை பார்த்து பயந்து ஓட வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது? அதுமட்டுமின்றி ஆதி குணசேகரன் தாக்கியதில் தலையில் அடிபட்டு கோமாவில் இருக்கும் ஈஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் கூறி வருகிறார்கள். இதனை கிண்டலடிக்கும் விதமாக நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள பதிவில், ஈஸ்வரி அட்மிட் பண்ணியிருக்குற ஆஸ்பிட்டல் அட்ரஸாவது கொடுங்க, நானே நேர்ல போய் பார்க்கிறேன் என கமெண்ட் செய்துள்ளார்.
ஜோடியாக காணாமல் போன தர்ஷன் - அன்புக்கரசி
எதிர்நீச்சல் சீரியல் அடிக்கடி சில கேரக்டர்கள் காணாமல் போய்விடும். அப்படி தான் தர்ஷன் - அன்புக்கரசி இருவரும் தற்போது சீரியலில் தலைகாட்டாமல் இருக்கிறார்கள். தர்ஷன் அம்மாவை பார்க்க ஆஸ்பத்திரியில் இருப்பதாக சொன்னாலும், அன்புக்கரசி என்ன ஆனார் என்பதை டைரக்டர் ஒரு எபிசோடில் கூட சொல்லவில்லை. இதை நோட் பண்ணிய நெட்டிசன்கள், ஒருவேளை அன்புக்கரசி ஸ்கூலுக்கு போய் அரையாண்டு தேர்வு எழுத சென்றிருப்பார் போல என கமெண்ட் செய்து வருகிறார்கள். இப்படி சீரியலில் உள்ள சில லாஜிக் ஓட்டைகளை சரி செய்தால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

