நடிகர் சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில், 'டாக்டர்' , 'அயலான்' என இரு படங்களில் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார். டாக்டர் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்க உள்ளார். 

இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸுடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் 'கேங் லீடர்' பட புகழ் பிரியங்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார், யோகி பாபு மற்றும் வினய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் படப்பிடிப்பு பிப்ரவரி 14 ஆம் தேதி கோவாவில் தொடங்கியது.

மேலும் செய்திகள்: எம்.பி... எம்.எல்.ஏ.க்களை டார்கெட் செய்த பிக்பாஸ் காயத்திரி! ஒத்த ட்விட்டில் பெயரை கூறி தட்டி தூக்க சொல்லி அதிரடி!

இந்நிலையில் நாளை (பிப்ரவரி 17 ) சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு  காலை 11:03 மணிக்கு, டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உச்சங்கத்தில் உள்ளனர்.