Asianet News TamilAsianet News Tamil

'டான்' படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்..!

இன்று, நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 36 ஆவது பிறந்தநாளை 'டான்' படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். 

sivakarthikeyan birthday celebration with don movie team
Author
Chennai, First Published Feb 17, 2021, 3:23 PM IST

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில், 24 ஏஎம் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீயாய் நடந்து வருகின்றன. 

இதையடுத்து லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனும் ஒன்றாக இணைந்து 'டான்' என்ற படத்தை தயாரிக்க உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ள அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார். 

sivakarthikeyan birthday celebration with don movie team

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டாக்டர்' படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த  ஹீரோயின் பிரியங்கா அருள் மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க தற்போது முன்னணி காமெடியனாக சூரி இந்த படத்தில் இணைந்துள்ளார். மேலும், காமெடி  நடிகர் முனீஸ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், குக் வித் கோமாளி ஷிவாங்கி என பலர் நடிக்கிறார்கள்.

sivakarthikeyan birthday celebration with don movie team

இன்று, நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 36 ஆவது பிறந்தநாளை 'டான்' படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் படத்தின் இயக்குனர், நடிகர் பால சரவணன், ஷிவாங்கி உள்ளிட்ட பலர் உள்ளனர். சிவகார்த்திகேயன் கேக் கொண்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios