தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனையடுத்து நேற்று அயலான் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கும் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ரவிக்குமார் இயக்கத்தில், 24 ஏஎம் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘அயலான்’. இதில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில், பாடல்கள் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

 

இதையும் படிங்க: உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் ஸ்லீவ் லெஸ் உடையில்... பிக்பாஸ் ஷிவானியின் அசத்தல் போட்டோ ஷூட்...!

எலியன் பற்றிய கதையம்சம் கொண்ட படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதனிடையே ரஜினி, கமல், விஜய் ஆகியோரை வைத்து பிரம்மாண்ட படங்களை தயாரித்துள்ள லைகா நிறுவனம், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. நேற்று லைகா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் உடன் இணைந்து படம் குறித்த அறிவிப்பை இன்று காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இதையும் படிங்க: இது தான் கல்யாண கலையா?... சிக்கென்ற அழகுடன் பட்டுப் புடவையில் ஜொலிக்கும் வரலட்சுமி...!

அதன்படி சற்று நேரத்திற்கு முன்பு லைகா நிறுவனம் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த மாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ள அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார். லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ மூலமாக படத்தின் பெயர் டான் என்பதும், கல்லூரி சம்பந்தமான கதையாக இருக்கலாம் என்பதும் தெரிகிறது. இதோ அந்த வீடியோ...