நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன். இந்த படத்தை மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இந்த படத்தை தொடர்ந்து யாரை இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்தது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவராகிய நெல்சன் இயக்கவுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர்கள் எம்.ராஜேஷ், ரவிகுமார், பி.எஸ்.மித்ரன் ஆகியோர்கள் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், விரைவில் இயக்குனர்கள் பாண்டிராஜ் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர்களின் இயக்கத்தில் உருவாகவுள்ள படங்களில் நடிக்கவுள்ளார்.  இந்த பட்டியலில் தற்போது நெல்சன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது