தொகுப்பாளர்

அகரத்திலிருந்து சிகரத்தை தொட்டவர்களுள் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சியில் சாதாரண போட்டியாளராக கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றார். அதன் பிறகு அதே தொலைக்காட்சியில் அது இது எது என்ற நிகழ்ச்சியில் அவரின் டைமிங் காமெடியில் கலக்கியவர்.அதைத்தொடர்ந்து பல நிகழ்ச்சியில் அவர் கலக்கினார்.

வெள்ளித்திரை

அதன் பிறகு வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார்.அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.மேலும் தொடக்கத்தில் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.தனக்கு அப்படி பட்ட கதாபாத்திரங்களே ஒத்து வரும் என்று நினைத்திருந்த சிவகார்த்திகேயன் மோகன்ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்திப் நடித்தார்.இந்த படம் இவர் மீது இருந்த எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியது.காமெடி தாண்டி நடித்து தன்னால் ஈர்க்க முடியும் என்பதை இப்படம் மூலம் நிரூபித்தார் சிவகார்த்திகேயன்.

பிறந்த நாள்

மேலும் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.இந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படம் போன்று இருக்கும் என்று கூறப்படுகிறது.இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான பிப்ரவரி 17 ம் தேதி வெளியிடப்பட்டது.

ராம்குமார்

இதையடுத்து சிவகார்த்திகேயன் 'நேற்று இன்று நாளை' பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.முதல் படத்தில் டைம் மிஷின் சம்பந்தமான கதையை எடுத்த இயக்குனர் ரவிகுமார் இந்த படத்தில் விஞ்ஞானி சம்பந்தமான கதை எடுக்கிறார்.

விஞ்ஞானி

வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து மனிதர்களை காப்பாற்றும் இக்கதையில் சிவகார்த்திகேயன் விஞ்ஞானியாக நடிக்கிறாராம்.