'அயலான்' படம் வெளியான சூப்பர் அப்டேட்..! கொண்டாடும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..!

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்து வரும் அயலான் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. இதைதொடர்ந்து கிராபிக்ஸ் பணியில், படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ரவிக்குமார் இயக்கத்தில், 24 ஏஎம் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘அயலான்’. 

sivakarthieyan ayalan movie latest update

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்து வரும் அயலான் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. இதைதொடர்ந்து கிராபிக்ஸ் பணியில், படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ரவிக்குமார் இயக்கத்தில், 24 ஏஎம் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘அயலான்’. இதில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில், பாடல்கள் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

sivakarthieyan ayalan movie latest update

இதற்கிடையில், கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்புகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதி கொடுக்க பட்டதால், 'அயலான்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மீண்டும் துவங்கியது.

sivakarthieyan ayalan movie latest update

படத்தில் அதிகளவு கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதால், அதை முடிக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வந்தனர் படக்குழுவினர். தற்போது அனைத்து பணிகளும் முடிந்து விட்டதை தொடர்ந்து, இந்த அப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் பாடல் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார் படக்குழுவினர். 'அயலான்' படம் குறித்து வெளியாகியுள்ள இந்த அப்டேட் சிவகார்த்திகேயன் ரசிகர்களை குஷியாகியுள்ளது. 

sivakarthieyan ayalan movie latest update

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ’டான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சிபிசக்கரவர்த்தி இயக்கி வரும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios