MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Vijay: முதல்வர் விஜய் மாதிரி ஃபிட் ஆகணுமா? இதோ சிம்பிள் வெயிட் லாஸ் பிளான்!

Vijay: முதல்வர் விஜய் மாதிரி ஃபிட் ஆகணுமா? இதோ சிம்பிள் வெயிட் லாஸ் பிளான்!

உடலை நாம் நேசித்தால், உடல் நம்மை அழகாகக் காட்டும்." இன்றிலிருந்தே இந்த எளிய வெயிட் லாஸ் பிளானைத் தொடங்குங்கள். நீங்களும் 'தளபதி' விஜய் போல என்றும் இளமையோடும், நல் ஆரோக்கியத்தோடும் மிளிரலாம்

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 01 2026, 08:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டு
Image Credit : Asianet News

இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டு

தமிழ் திரையுலகில் தசாப்தங்களாகத் தன் உடலமைப்பை அப்படியே கட்டுக்கோப்பாக வைத்திருந்து, தற்போது அரசியல் களத்திலும் அதே சுறுசுறுப்போடு வலம் வருபவர் தமிழக முதல்வர் விஜய். 50-ஐ நெருங்கினாலும் அவரது இளமையும், 'ஃபிட்னஸ்' ரகசியமும் பலரையும் வியக்க வைக்கிறது. "நாமளும் விஜய் அண்ணா மாதிரி ஃபிட்டாகணும்" என்று நினைப்பவர்களுக்கான எளிய, அதே சமயம் தீவிரமான வெயிட் லாஸ் பிளான் இதோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
மனக்கட்டுப்பாடு: முதல் படி
Image Credit : Freepik

மனக்கட்டுப்பாடு: முதல் படி

உடல் எடையைக் குறைப்பதில் 70% டயட்டும், 30% உடற்பயிற்சியும் தான் வேலை செய்கிறது. விஜய் அவர்களின் ஃபிட்னஸ் ரகசியத்தில் மிக முக்கியமானது 'டிசிப்ளின்' (Discipline). கண்ட உணவுகளையும் தவிர்த்து, எப்போது, எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை முதலில் மனதளவில் கொண்டு வர வேண்டும்.

38
எளிமையான டயட் பிளான் (Diet Plan)
Image Credit : Freepik

எளிமையான டயட் பிளான் (Diet Plan)

விஜய் அவர்கள் பொதுவாக மிக எளிமையான, அதே சமயம் சத்துக்கள் நிறைந்த உணவுகளையே உட்கொள்கிறார்.

  • காலை உணவு: காலையில் அதிக எண்ணெய் இல்லாத இட்லி அல்லது ஓட்ஸ் கஞ்சி, அதனுடன் முட்டையின் வெள்ளைக்கரு (Protein) எடுத்துக்கொள்ளலாம்.
  • மதிய உணவு: அதிக சாதம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு கைப்பிடி அளவு பழுப்பு அரிசி (Brown Rice) அல்லது தினை சாதம், நிறைய காய்கறிகள் மற்றும் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • இரவு உணவு: இரவு 7 முதல் 8 மணிக்குள் உணவை முடித்துவிடுவது நல்லது. இரண்டு சப்பாத்தி அல்லது சுடச்சுட காய்கறி சூப் மற்றும் கிரில்டு சிக்கன்/பன்னீர் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
  • முக்கிய குறிப்பு: சர்க்கரை, மைதா, பேக்கரி உணவுகள் மற்றும் சாஃப்ட் டிரிங்க்ஸ் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
48
கார்டியோ மற்றும் எளிய உடற்பயிற்சிகள்
Image Credit : Freepik

கார்டியோ மற்றும் எளிய உடற்பயிற்சிகள்

விஜய் தனது நடனத்திற்காகவும், சுறுசுறுப்பிற்காகவும் தினமும் கார்டியோ (Cardio) பயிற்சிகளை மேற்கொள்கிறார்.

தினமும் 45 நிமிட நடைப்பயிற்சி: ஜிம்மிற்குப் போக நேரமில்லை என்றாலும், தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ 45 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும் (Brisk Walking).

கார்டியோ பயிற்சிகள்: ஜாக்கிங், ரன்னிங் அல்லது கயிறு குதித்தல் (Skipping) போன்ற பயிற்சிகள் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகளை வேகமாக எரிக்கும்.

ஸ்ட்ரென்த் டிரைனிங்: வாரத்தில் 3 நாட்கள் புஷ்-அப்ஸ், ஸ்குவாட்ஸ் போன்ற எளிய உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்வதன் மூலம் தசைகள் வலுப்பெறும், உடல் 'டோன்' (Toned Body) ஆகும்.

58
தண்ணீர் மற்றும் தூக்கம்
Image Credit : Freepik

தண்ணீர் மற்றும் தூக்கம்

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் செய்யும் பொதுவான தவறு, போதிய அளவு தண்ணீர் குடிக்காதது. தினமும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, செரிமானத்தை சீராக்கும்.

அதேபோல், முதல்வர் விஜய் போன்ற பிஸியான நபர்கள் கூட தங்களது தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தினமும் 7 முதல் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம். தூக்கமின்மை உடல் எடையை அதிகரிக்கும் ஹார்மோன்களைத் தூண்டிவிடும்.

68
Being Hydrated and Eating Clean
Image Credit : Freepik

Being Hydrated and Eating Clean

எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிட வேண்டும், பச்சை காய்கறிகள் மற்றும் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் எனவும் நண்பர்களிடம் விஜய் கூறுவாராம். மதியம் 3 மணிக்கு மேல் பதப்படுத்தப்பட்ட மற்றும் பச்சை உணவுகளைத் தவிர்க்க வேண்டும் இது செரிமான அமைப்புக்கு அதிக சுமை கொடுக்காமல், உடலுக்கு ஊட்டமளித்தது என்பதும் விஜய் கடைபிடிக்கும்  ஆரோக்கிய மந்திரமாம்.

78
Stop Gymming for Gimmicks
Image Credit : Freepik

Stop Gymming for Gimmicks

விஜயின் எளிய உடற்பயிற்சி திட்டத்தில் எந்தவொரு ஃபேஷனான உடற்பயிற்சியோ, மிகைப்படுத்தப்பட்ட டயட்டோ, சப்ளிமென்ட்களோ இல்லையாம். மனதைக் கட்டுப்படுத்தி, ஒழுக்கத்துடன் ஒரு விஷயத்தை பின்பற்றினால் அற்புதங்கள் நிகழும் என்பதை அவரது மாற்றம் காட்டுகிறது.

88
Sustainable Lifestyle
Image Credit : Asianet News

Sustainable Lifestyle

எடை குறைப்பை ஒரு தற்காலிக நிகழ்வாகப் பார்க்காமல், விஜய் அதை ஒரு வாழ்க்கை முறை மாற்றமாகவே கருதினார். சீக்கிரம் சாப்பிடுவது, கவனமாக மென்று சாப்பிடுவது, நடைப்பயிற்சி மற்றும் நல்ல தூக்கம் போன்ற அவரது பழக்கங்கள் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு ஏற்றவை.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வாழ்க்கை முறை
உடற்பயிற்சி
விஜய் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தீபாவளிக்கு மனைவிக்கும், அம்மாவுக்கும் என்ன வாங்கலாம்? டாப் 6 அசத்தல் கிப்ட் ஐடியாக்கள் இதோ!
Recommended image2
Travel : வெறும் ரூ.2,000 செலவில் 6 மாநிலங்கள்! எப்படி டிராவல் செய்கிறார் இந்தப் பெண்? ரகசியம் இதுதான்!
Recommended image3
Water Taps: துருப்பிடித்த தண்ணி குழாய்கள் புதுசு போல ஜொலிக்கணுமா? 'இந்த' 2 சமையலறை பொருட்கள் போதும்!
Related Stories
Recommended image1
Health Tips: ஆரோக்கியமான உணவு ஏன் முக்கியம்? சத்தான உணவுகளின் அத்தியாவசிய நன்மைகள்!
Recommended image2
Hair Health: உங்க தலைமுடி பலவீனமாக இதுதான் காரணமா? நீங்கள் தினமும் செய்யும் 6 தவறுகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved