நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து நடிக்க வரும் அடுத்த வாரிசு..! இயக்குனர் யார் தெரியுமா?
சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து, மற்றொரு இளம் ஹீரோ நடிக்க வருகிறார். அவர் அறிமுகமாக உள்ள படத்தை தேசிய விருது இயக்குனர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து, மற்றொரு இளம் ஹீரோ நடிக்க வருகிறார். அவர் அறிமுகமாக உள்ள படத்தை தேசிய விருது இயக்குனர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின், நடிப்பு பொக்கிஷமாக பார்க்கப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தன்னுடைய ஈடு இணையில்லா நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர், கடந்த 2001 ஆம் ஆண்டு, தன்னுடைய 74 ஆவது வயதில் காலமானார்.
இவரை தொடர்ந்து இவரது வாசிசுகளும் திரைப்படம் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள், அந்த வகையில் 80 மற்றும் 90 களில் சூப்பர் ஹீரோவாக கலக்கினார், சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபு, இவரை தொடர்ந்து இவரது மூத்த மகன், தயாரிப்பாளர் என்பதை தாண்டி, ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் இவர்களது வாரிசுகள், துஷ்யத், விக்ரம் பிரபு, சிவகுமார் ஆகியோரும் ஹீரோவாக அறிமுகமாகினர். தற்போது விக்ரம் பிரபு மட்டுமே ஒரு நடிகர் என்கிற அடையாளத்தை ரசிகர்கள் மனதில் பதித்துள்ளார். மற்ற இருவராலும் திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்கமுடியவில்லை.
இவர்களை தொடர்ந்து தற்போது, சிவாஜி கணேசன் அவர்களின் மூத்த மகனின், மகன் தர்ஷன் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக இவர், சண்டை பயிற்சி, மேடை நாடகம், நடனம் போன்றவற்றை கற்று கைதேர்ந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இவர் நடிக்க உள்ள முதல் படத்தை, பிரபல தேசிய விருது இயக்குனர்... சீனு ராமசாமி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. கிராமத்து கதைகளை மையமாக வைத்து, படம் இயக்கி வரும் சீனு ராமசாமி இந்த படத்தையும் கிராமத்து கதையம்சம் கொண்ட படமாகவே எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.