லதா மங்கேஷ்கர் சென்னை வரும்போதெல்லாம் சிவாஜி வீட்டில் தான் தங்குவாராம். இதற்காக தனது வீட்டின் ஒரு பகுதியில் லதா மங்கேஷ்கருக்காக ஒரு குட்டி பங்களா ஒன்றை கட்டிக் கொடுத்தாராம் சிவாஜி. 

பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு இசையுலகின் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. திரையுலகில் 70 ஆண்டுகளுக்கு மேலாக 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களை பாடி இந்திய திரையுலகில், மிகச்சிறந்த பின்னணிப் பாடகியாக புகழ் பெற்று விளங்கிய இவர், தமிழிலும் ஒரு சில பாடல்களைப் பாடி உள்ளார்.

அவற்றையெல்லாம் விட இவருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் இடையேயான உறவு மிகவும் ஸ்பெஷலானது. சிவாஜி லதா மங்கேஷ்கரை விட 1 வயது மூத்தவர். திரையுலகை பொருத்தவரை இருவரும் சமகால கலைஞர்கள் என்பதால், இருவருக்கும் இடையே பாசமலர் பாணியிலான உறவு இருந்துள்ளது.

லதா மங்கேஷ்கர் சென்னை வரும்போதெல்லாம் சிவாஜி வீட்டில் தான் தங்குவாராம். இதற்காக சிவாஜி தனது வீட்டின் ஒரு பகுதியில் லதா மங்கேஷ்கருக்காக ஒரு குட்டி பங்களா ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளாராம். அந்த பங்களாவை இரண்டே மாதத்தில் கட்டினாராம் சிவாஜி. தன் உடன் பிறந்த சகோதரி போலவே பார்த்துக் கொள்வாராம் சிவாஜி.

லதா மங்கேஷ்கர் தமிழில் தான் பாடிய முதல் பாடலுக்கு சம்பளமே வாங்காமல் பாடிக்கொடுத்தாராம். ஆனந்த் என்கிற படத்தில் இடம்பெறும் ஆராரோ ஆராரோ என்கிற பாடலைத் தான் அவர் சம்பளமே வாங்காமல் பாடினாராம். ஏனெனில் இந்த படத்தில் பிரபு தான் ஹீரோவாக நடித்திருந்தார். சிவாஜி மகனின் படம் என்பதால், என் அண்ணனுக்காக இலவசமாக பாடுகிறேன் என்று சொன்னாராம் லதா. 

மேலும் தீபாவளி போன்ற விழாக்காலங்களில் சிவாஜி குடும்பத்துக்கு புது துணி, பலகாரங்கள் எல்லாம் அனுப்பி வைப்பாராம் லதா மங்கேஷ்கர். கடந்த தீபாவளி வரை அந்த நடைமுறையை அவர் தொடர்ந்து செய்து வந்ததாக கூறப்படுகிறது.