'இரும்புத்திரை' புகழ் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில்,  கல்யாணி பிரியதர்ஷன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், இந்தி நடிகர் அபேய் தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

தற்கால கல்வி முறையை தோலுரித்துக் காட்டும் வகையில், சமூக அக்கறையுடன் கூடிய கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள ஹீரோ படம், வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகவுள்ளது. 
இதனையடுத்து, படத்தின் ப்ரமோஷன் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள படக்குழு, அடுத்தடுத்து பல சர்ப்ரைஸ்களை ரசிகர்களுக்கு அளித்து வருகிறது. 

அந்த வகையில், 'ஹீரோ' படத்தின் செகண்ட் சிங்கிள் ட்ராக் நாளை (நவ.29) வெளியாகும் அறிவித்திருக்கும் வேளையில் திடீரென இன்று படத்தின் புதிய ஸ்டில்கள் மற்றும் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளது படக்குழு. 

இதில், சூப்பர் ஹீரோ காஸ்ட்யூமில், மாஸ்க் அணிந்தபடி சிவகார்த்திகேயன் மிரட்டியிருக்கும் இந்த புதிய போஸ்டர், அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக, சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹீரோ காஸ்ட்யூம் குழந்தைகளை வெகுவாக இம்ப்ரஸ் செய்துள்ளது.


இந்த நிலையில், சூப்பர் ஹீரோவின் காஸ்ட்யூம் மற்றும் மாஸ்க்கை தேர்வு செய்ததன் சுவாரஸ்யத்தை தற்போது ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார். வழக்கமாக சர்வதேச சூப்பர் ஹீரோ படங்களில் ரெக்ஸின் மாதிரிதான் சூப்பர் ஹீரோ உடை இருக்குமாம். ஆனால் 'ஹீரோ' படத்தில் நம்ம ஊர் கனெக்ட் இருக்கும் என்றும், இந்த உடையில் குட்டிக் குட்டி டீடெய்ல்ஸ் நிறைய இருக்கு என்றும் கூறியுள்ள சிவகார்த்திகேயன், கிட்டத்தட்ட 15 டிசைனுக்கு மேல் பார்த்தபிறகுதான் இந்த டிசைன் ஓகே ஆனதாகவும் கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார். 

இந்தப் படத்தில் அந்த மாஸ்க்குக்கான காரணம் ஒரு எமோஷனோட இருக்கும் என கூறியுள்ள அவர், ஷூட்டிங் முடிந்ததும் அந்த மாஸ்க்கையும், சூட்டையும் வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டதாகவும், அதைப் பார்த்த அவரது மகள் ஆராதனா ரொம்பவே குஷி ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், "இந்த சூப்பர் ஹீரோ மாஸ்க் உங்களுடைய முகத்துக்கு கரெக்ட்டாக இருக்கு. என்னுடைய முகத்துக்கும் ஒண்ணு பண்ணிக் கொடுங்கப்பா" என அப்பா சிவகார்த்திகேயனிடம் அன்பு கோரிக்கை விடுத்துள்ளாராம் மகள் ஆராதனா. சூப்பர் ஹீரோ காஷ்ட்யூம் மற்றும் மாஸ்க், தனது மகளுக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டதால், மற்ற குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் சிவகார்த்திகேயனும் ரொம்பவே ஹேப்பியாக உள்ளாராம்.