தற்போது நடைபெற்று வரும், வேலைநிறுத்தம் காரணமாக வெளியாக உள்ள அனைத்து படங்களின் ரிலீசும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்புகள் மற்றும் அனைத்து தொழில் நுட்ப பணிகளும் முடங்கியுள்ளது. 

இந்த வேலை நிறுத்ததிற்கு அனைத்து யூனியன்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் 62 வது படம் உட்பட மேலும் இரண்டு படங்களுக்கு மட்டும் ஓரிரு நாட்கள் படபிடிப்பு நடத்துவதற்கு தயாரிப்பாளர் சங்கம் அனுமதி கொடுத்துள்ளது. அதற்கான காரணங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்து ஒரு சில திரையுலக பிரபலங்கள் தங்களுடைய கருத்தை வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.

இந்தநிலையில், நடிகர் சித்தார்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது, 'போட்டிகள் நிறைந்த இந்த சினிமா உலகில் ஒவ்வொரு படமும் சரிக்கு சமமான சவால்களை சந்தித்து தான் வெளியாகிறது. இந்த நிலையில் சில படங்களுக்கு மட்டும் இது போன்ற சிறப்பு அனுமதி கொடுத்து படப்பிடிப்பு நடத்த அனுமதிப்பது அனைவருக்கும் உள்ள ஒற்றுமையை உடைப்பது போல் உள்ளது. அப்படி என்றால் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் சிறப்பு அனுமதி கொடுக்க வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும் என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.