இம்சை கொடுத்த கன்னியாகுமரி இசக்கியப்பன் என்கிற இளைஞருக்கு நடிகை கஸ்தூரி அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

நடிகை கஸ்தூரி ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவரை பல்லாயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த லிஸ்டில் வெறித்தனமாக கஸ்தூரியை பின் தொடர்பவர் கன்னியாகுமரியை சேர்ந்த இசக்கியப்பன். கஸ்தூரி எந்த ட்டிவிட் போட்டாலும் அதனை ரி-ட்விட் போட்டு, நான்கைந்து கருத்துக்களையும் போட்டு திணறடித்து விடுவார் இசக்கியப்பன். 

’கஸ்தூரி அக்கா உங்க தம்பி கன்னியாகுமரி இசக்கி. என்னைப் பார்த்து ஒரு நபர் ஒரு வார்த்தை சொன்னார். அன்னைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் உன் அக்கா. அழுதார். அதற்கு நீ என்ன செய்தாய். என்னைக்கும் என் அக்காவுடைய குழந்தைகள் நல்லா இருக்கணும் என்று என் இறைவனிடம் வேண்டினேன்’’ என்கிற வகையில் ட்விட் போட்டு வருபவர். இதனால் எரிச்சலான பலரும் இசக்கியப்பனை ‘வேற வேல வெட்டியே  இல்லையா’ என்றெல்லாம் கருத்து பதிவிட்டாலும் அசராமல் கஸ்தூரியை கொண்டாடி வந்தார் இசக்கியப்பன்.

ஆனால், இப்போது இசக்கியப்பனை தனது ட்விட்டர் பக்கத்தில் ப்ளாக் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் கஸ்தூரி. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கஸ்தூரி, நம்ம வேலையை நாம கவனிப்போம்’’ எனத் தெரிவித்துள்ளார். இதனை எதிர்பார்க்காத இசக்கியப்பன் ‘’  கஸ்தூரி அக்கா தம்பி இசக்கி கன்னியாகுமரி. அக்கா. Very  very sorry. அக்கா நீங்க ட்விட்டர் சொன்ன ஒரு பதிலை இசக்கி தம்பி என் நெஞ்சு வலிக்கு. அக்கா நீங்க என்னைக்கு நல்லா இருக்கனும் சந்தோஷமா இருக்கு, உங்க பிள்ளைகளும் நல்லா இருக்கும் அக்கா. 

 

கஸ்தூரி அக்கா யாரென்றே தெரியாத ஒரு நபர் என்னை பார்த்து சொல்லி என்ன ரொம்ப இன்சல் பண்ணிட்டீங்க எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. அக்கா கஷ்டமா இருக்கு. கஸ்தூரி அக்கா வாழ்க்கையில ஒன்று மட்டும் தெரிஞ்சுக்கோங்க. நம்ம சாப்பிடுற தக்காளி நடுரோட்டில் இருக்கு. கால்ல போடுற செருப்பு ஏசி ரூம்ல இருக்கு. அதை ஒன்று மட்டும்  புரிந்து கொள்ளுங்கள் சகோதரி என் தோழி. என் அக்கா’’ என கெஞ்சிக் கூத்தாடியுள்ளார் இசக்கியப்பன்.