’மாரி 2’ படத்தின் மூலம் கிடைத்த மாபெரும் வரவேற்பை ஒட்டி தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்த திட்டம் போட்டிருக்கிறாராம் மலர் டீச்சர் சாய் பல்லவி. இதனால் தயாரிப்பாளர்கள் அவர் இருக்கும் திசைக்கே செல்லப் பயப்படுகிறார்கள்.

‘மாரி2’ படம் சுமாரான வெற்றிதான் என்றாலும் அதில் சாய் பல்லவி தனுஷுடன் கெட்ட ஆட்டம் போட்ட ‘ரவுடி பேபி’ உலக அளவில் வைரலாகி பல ரெகார்டுகளை முறியடித்தது. இதனால் சாய் பல்லவிக்கு மவுசு கூடியது. இயக்குநர்கள் சிலர் கதை சொல்ல முயன்றபோது தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் பிசியாக இருப்பதாகக் கூறித் தவிர்த்தார். அவர் ஏற்கனவே சூர்யா செல்வராகவன் கூட்டணியில் நடித்து முடித்திருக்கும் ‘என்.ஜி.கே’, ஃபகத் ஃபாசிலுடன் நடித்து முடித்திருக்கும் ‘அதிரன்’ தவிர இவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லை.இந்தத் தவிர்ப்புக்குக் காரணம் தனது சம்பளத்தைக் கணிசமாக ஏற்ற சாய் பல்லவி முடிவெருத்திருப்பதே என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. தெலுங்குப் படங்களில் 50 லட்சமும், ‘மாரி 2’வுக்கு 40 லட்சமும் சம்பளமாக வாங்கிய சாய் தனது சம்பளத்தை ஒரு கோடிக்கு உயர்ந்த திட்டமிட்டிருக்கிறாராம்.சாய் பல்லவி குறித்து இன்னொரு குட்டிச்செய்தியும் உலா வருகிறது. பல முனைகளிலிருந்தும் அழைப்புகள் வருவதால் மிக விரைவிலேயே இவரது தங்கை ராதாவும் வெள்ளித்திரையில் காலடி எடுத்துவைக்க வாய்ப்புள்ளதாகவும், அவரது முதல் படம் அநேகமாக தனுஷுடன் இருக்கக்கூடும் என்றும் தகவல்.