நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த தற்கொலைகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதற்கிடையே தமிழகம் உள்பட நாடு முழுவதும் நீட் தேர்வுகள் நடைபெற்றன. நீட் தேர்வுக்கு எதிராக பல அமைப்புகள் தேர்வு மையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: வெள்ளை நிற கவுனில் ஏஞ்சல் போல் இருக்கும் ரோபோ சங்கர் மகள்! 'பிகில்' பாண்டியம்மாவா இது? அசந்து போன ரசிகர்கள்!
 

இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று  இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் நீதிமன்றத்தையும் விமர்சித்திருந்தார் நடிகர் சூர்யா என்றும்,  சூர்யாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் ஒன்றையும் எழுதினர்.  அந்தக் கடிதத்தில், “சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் . சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும்  நீதிமன்றத்தின் நேர்மையையும் சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.  சூர்யாவின் இந்த கருத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் விட்டால், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேனா? உண்மையை உடைத்த விஜய் பட நடிகை!
 

அந்தக் கடிதத்தில் கொரோனாவுக்கு பயந்து காணொலி காட்சி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் சென்று தேர்வு எழுத உத்தரவிடுகிறது என்ற சூர்யாவின் வாசகங்களை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் சுட்டிக்காட்டி இருந்தார்.

மேலும் செய்திகள்: விளையாடி கொண்டிருந்த போது மாரடைப்பு..! பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்..! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!
 

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் சூர்யாவின் அறிக்கைக்கு எதிராக, கடிதம் எழுதி இருந்தாலும், மேலும் 6 நீதிபதிகள் சூர்யாவிற்கு ஆதரவாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று, இந்த கடிதம் மீது நடைபெற்ற விசாரணையில் "நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை" என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.