தமிழ் பட உலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒரு சிலரே எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்யாமல், பந்தா காட்டாமல், நடிக்கிறார்கள்.

பலர் படப்பிடிப்பு எங்கு நடந்தாலும், தனக்கு 'தனி கேரவன் வேண்டும் ... கேரவன் இருந்தால் தான் நடிப்பேன் என அடம்பிடிப்பதும் உண்டு.

இப்படி இல்லாமல், மிகவும் எளிமையான சுபாவம் கொண்ட நடிகைகளில் ஒருவர் நடிகை சிருஷ்டி டாங்கே. இவரை பற்றி இதுவரை யாருக்கும் தெரிந்திராத தகவலை 'சத்ரு' படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.

'சத்ரு' படத்தில் வந்த ஒரு பாடல் காட்சி, புதுசேரி கடற்கரையில் நடந்தது. அந்த இடத்திற்கு கேரவன் கொண்டு போக முடியவில்லை. பாடல் காட்சியில் சிருஷ்டி டாங்கே 20 முறை உடைகளை மாற்ற வேண்டியிருந்தது.

அங்குள்ள ஒரு பொது கழிவறைக்கு போய் சற்றும், சிரமம் பார்க்காமல், முகம் சுழிக்காமல் உடைகளை மாற்றினார். இவரின் இந்த செயல் படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியது என உதவி இயக்குனர் தெரிவித்தார்.