Asianet News TamilAsianet News Tamil

விஜய் ஆண்டனியும் இல்லை.. ஜீவாவும் இல்லை.. ஒரே வீடியோ - பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அனுயா!

Actress Anuya : திரையுலகில் மிக குறுகிய காலமே இருந்து, வெகுசில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று செல்லும் நடிகர், நடிகைகள் பலர் உள்ளனர். அந்த வகையில் ஒரு சில படங்களில் நடித்து அதன் பிறகு சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றவர் தான் நடிகை அனுயா.

Single like prime minister actress anuya puts pull stop for all gossips about her video ans
Author
First Published Dec 9, 2023, 9:06 AM IST

துபாயில் பிறந்து பூனேவில் தனது பட்டப் படிப்பை முடித்த நடிகை அனுயா கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடிப்பு சம்பந்தமான படிப்பில் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ஜீவாவின் "சிவா மனசுல சக்தி" திரைப்படம் நடிகை அனுயாவிற்கு ஒரு மிகப்பெரிய பிரேக் கொடுத்த திரைப்படமாக அமைந்தது. 

அதன் பிறகு தமிழில் தொடர்ச்சியாக அவர் படங்களில் நடிக்க துவங்கினார். சிவா மனசுல சக்தி படம் வெற்றி பெற்றாலும், தமிழில் தொடர்ச்சியாக அவர் நடித்து வந்த பொழுதும், பெரிய அளவில் அவருக்கான கதாபாத்திரம் அமையவில்லை. குறிப்பாக அவர் அறிமுகமான சில வருடங்களிலேயே தளபதி விஜய் அவர்களுடைய நண்பன் திரைப்படத்தில் நாயகி இலியானாவிற்கு அக்காவாக நடித்திருப்பார்.

மீண்டும் துவங்கிய விடாமுயற்சி ஷூட்டிங்.. பரபரப்பாக அஜர்பைஜான் கிளம்பிய தல அஜித் - வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ! 

வெறும் 7 ஆண்டுகள் மட்டுமே திரைத்துறையில் பயணித்து பின் அதிலிருந்து விலகிய அவர் தற்பொழுது புனேவில் வசித்து வருகிறார். சுமார் 9 ஆண்டுகளாக படங்களில் நடிக்காத அவர், தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும் தான் பல நடிகர்களுடன் ரகசிய உறவில் இருப்பதாகவும் வதந்திகள் பரவி வருவதால் அதற்கு ஒரு வீடியோ பதிவின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில் தனது தந்தை துபாயில் மருத்துவராக பணியாற்றியவர் என்றும் தானும் துபாயில் பிறந்தவர் தான் என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு பூனேவில் தான் நடிப்பு சம்பந்தமான பயிற்சியை பெற்றதாகவும், மேலும் பொறியியல் படிப்பில் தான் ஃபர்ஸ்ட் கிளாஸ் மாணவியாக தேர்ச்சி பெற்றவர் என்றும் தெரிவித்துள்ளார். 

ப்ளீஸ் லேடி சூப்பர்ஸ்டார் வேண்டாம்... பயங்கரமா திட்றாங்க - பட்டத்தை பார்த்து பயப்படும் நயன்தாரா

விஜய் ஆண்டனி, ஜீவா மற்றும் சுந்தர் சி போன்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் நான் உறவில் இருப்பதாக வெளிவரும் செய்திகள் அனைத்தும் வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் மட்டுமே என்று கூறிய அவர், தான் பிரதமர் மோடியை போல சிங்கிள் நாயகியாக வலம் வருவதாக கூறியுள்ளார். மேலும் அவர் இன்றளவும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? என்பது குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், "என்னை சுற்றி உள்ள ஆண்கள் சரியில்லை" என்று பதில் அளித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Follow Us:
Download App:
  • android
  • ios