தெலுங்குத் திரையுலகில் பிரபலமான பாடகி சுனிதா. தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், டப்பிங் கலைஞர், நடிகை எனப் பன்முகம் கொண்டவர்.  ஃபிலிம்ஃபேர், நந்தி விருதுகள் எனப் பல்வேறு விருதுகளை வென்றிருப்பவர். விவாகரத்தான சுனிதா தனது மகனையும் மகளையும் வளர்த்து வருகிறார். இவரது மகள் ஷ்ரேயாவும் தெலுங்கில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

 

இதையும் படிங்க: பிகினியில் மாளவிகா மோகனன்... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த “மாஸ்டர்” நாயகி...!

‘காதல் ரோஜாவே’, கமலின் ‘விக்ரம்’ உட்பட பல முக்கிய படங்களில் சுனிதா பாடியுள்ளார். தெலுங்கு திரையுலகின் சித்ரா என புகழப்படும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.  அப்படி சுனிதாவின் தீவிர ரசிகை ஒருவரிடம் கைவரிசையை காட்டிய மோசடி ஆசாமியை தட்டித்தூக்கிய போலீசார். தற்போது கம்பி எண்ண வைத்துள்ளனர்.  ஐதராபாத்தைச் சேர்ந்த சைதன்யா என்ற நபர், தன்னை பாடகர் எனக்கூறி முகநூலில் வலம் வந்துள்ளார். அப்படியே பாடகி சுனிதாவின் ரசிகர்களையும் பின்தொடர்ந்து வந்துள்ளார். 

 

 

அப்படி ஒரு வசதியான பெண்மணியை பேஸ்புக்கில் பின்பற்றிய சைதன்யா, அந்தப் பெண்ணின் வாட்ஸ் ஆப் எண்ணை ரகசியமாக பெற்றுக் கொண்டார். பின்னர் வாட்ஸ் ஆப்பில், சுனிதா படத்தை ஸ்டேட்டசாக வைத்து அந்தப் பெண்மணியைத் தொடர்பு கொண்டுள்ளார். சுனிதாவின் ரசிகையிடம் தான் கேரளாவில் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு நிதி உதவி செய்ய வேண்டுமென கேட்டுள்ளார். உடனே அந்த பெண்மணியும் அவரை நம்பி தனது வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடியே 70 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். 

 

 

இதையும் படிங்க: நடிகர் தனுஷ் வீட்டில் விசேஷம்... ஒரே ஒரு போட்டோவால் கசிந்த ஒட்டுமொத்த ரகசியம்...!

இதையடுத்து சுனிதாவிடம்  வீடியோ கால் மூலமாக பேச வேண்டுமென அந்த ரசிகை தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து சைதன்யா அந்த பெண்ணின் எண்ணை பிளாக் செய்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சுனிதாவின் தீவிர ரசிகை போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் நடத்திய  விசாரணையில் சைதன்யா சிக்கியுள்ளார். இதையடுத்து பாடகி சுனிதாவின் உறவினர் எனக்கூறி பலரிடமும் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சைதன்யாவிற்கு உதவி 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.