அறிமுக இயக்குனர்கள் தங்கள் அத்தனை உழைப்பையும் அறிவையும் கொட்டி பல நல்ல படங்களை எடுத்தாலும், அதில் வெற்றி பெறுவது ஒரு சில படங்கள் மட்டுமே... மற்ற படங்கள் நல்ல கதைக்களம் கொண்டவையாக இருந்தாலும் எனோ தோல்வியை சந்திக்கிறது.
ஆனால் பிரபல நடிகர்களில் வாரிசுகள் படம் எடுத்தால், நடிகர்களில் ரசிகர்களே அந்த படத்தை கொண்டாடி வெற்றி பாதையை நோக்கி கொண்டுசெல்கின்றனர்.
இந்நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்கள் எப்படி பட்டவையாக இருந்தாலும் அதனை ட்விட்டர் மூலம் நேரடியாகவே கூறுகின்றனர். இந்த பழக்கம் பாலிவுட்டில் இருந்து தற்போது கோலிவுட்டிற்கும் பரவியுள்ளது.
தற்போது பிரபல பாடகி சுசித்ரா தன் ட்விட்டர் பக்கத்தில் ‘சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தை தான் கோச்சடையான் என்ற கார்டூன் படத்தில் பார்த்துவிட்டோமே, பிறகு ஏன் மற்றொரு(விஐபி-2) படம் எடுத்து டார்ச்சர் செய்ய வேண்டும்?’ என்று கேட்டுள்ளார்.
இது திரையுலகத்தில் உள்ள பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் உண்மையில் சுசித்ரா தான் இந்த பதிவை போட்டாரா ... என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். நாளைக்கே அவர் தனது ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டதாக கூறினாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை...
