இன்று கோலிவுட் திரையுலகில் உச்சம் தொட்ட நடிகராக இருப்பவர் தல அஜித். இவர் ரசிகர் கூட்டத்தை கலைத்த போதிலும், அஜித் ரசிகர்கள் மன்றம் ஒன்றை துவங்கி அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு, பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக அஜித்தின் படம் குறித்து எந்த தகவல் வந்தாலும் அன்று அவர்களுக்கு தீபாவளி தான். 

அஜித்தை சாதாரண மக்களுக்கும் பிடிக்க காரணம், திரையுலகினரின் எந்த உதவியும் இன்றி, மிகவும் கஷ்டப்பட்டு திரையுலகிற்கு வந்து சாதித்தவர் என்பதால். மேலும்'வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது' என்கிற பழமொழிக்கு ஏற்ப இவர் யாருக்கும் தெரியாமல் தன்னால் முடிந்த உதவியை பலருக்கு செய்து வருவாகிறார்.

இந்நிலையில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அஜித் குறித்து இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். 

அதாவது, எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது மகன் எஸ்.பி.பி.சரணுடன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அஜீத்குமாரை நான் தான் சினிமாவில் அறிமுகம் செய்தேன் என்றொரு புதிய தகவலை வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆந்திராவில் என் மகன் எஸ்.பி.பி.சரணும், அஜீத்தும் ஒன்றாகத்தான் மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்தார்கள். ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த அஜீத், செண்டி மென்டாக எனது மகனின் டிரஸ்களைத்தான் அணிந்து செல்வார்.

அதன்பிறகு 'பிரேம புஸ்தகம்' என்ற தெலுங்கு படத்தில் நடிக்க நான்தான் அஜீத்தை அறிமுகம் செய்தேன். இப்போது பெரிய ஹீரோவாகி விட்டார். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் எந்த ஆடம்பரமும் செய்து கொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்றும், சினிமா, குடும்பம் என்றும் அமைதியாக வாழ்ந்து கொண்டு வருகிறார். அதுதான் அவரிடம் தனக்கு மிகவும் பிடித்த விசயம் என  கூறியுள்ளார். 

ஏற்கனவே அஜித்தின் வியாழக்கிழமை செண்டிமெண்ட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும், தற்போது எஸ்.பி.பி. மூலம் பழைய செண்டிமெண்ட் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.