பிரபல இசைப்பாடகி,  ரிஹானா இவரது தந்தை ரொனால்டு பென்டி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கில் அவர் கூறியுள்ளதாவது, தனது தந்தை ரொனால்டு பென்டி அவருடைய நண்பர் மோசஸ் பெர்கின்ஸ் என்பவருடன் சேர்ந்து பென்டி என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார்.

அதேநேரத்தில் ரிஹானாவும் பென்டி பியூட்டி என்கிற, அழகு சாதன பொருட்கள் நிறுவனம் ஒன்றை 2017ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வந்துள்ளார். மேலும் உள்ளாடை நிறுவனம் ஒன்றையும் சொந்தமாக நடத்தி வந்துள்ளார். 

இந்த நிலையில் ரிஹானாவின் பெயரை அவரது அனுமதியின்றி அவரது தந்தையும், அவருடைய நண்பர் மோசஸ் என்பவரும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன், பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதை நிறுத்திக் கொள்ளுமாறு பாடகி ரிஹானா கூறியும் அவர்கள் அதனை கேட்காததால், தந்தை ரொனால்டு பென்டி மற்றும் அவருடைய நண்பர் மோசஸ் ஆகியோர் மீது ரிஹானா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் தந்தை மற்றும் மகள் ஆகியோருக்கு இடையில் பிரச்சனை வெடித்துள்ளது.