singer krish go to big boss?

பிரபல பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான க்ரிஷ், தற்போது பாடகர் என்பதையும் கடந்து, ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் ஒரு நல்ல விஷயத்திற்காக ட்விட்டரை விட்டு விலகுகிறேன்" என்று கூறியிருந்தார்.

இவர் இப்படிக் கூறியுள்ளதால், நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் களமிறங்கப் போகிறீர்களா என்று பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்தக் கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் கூறாமல் மௌனம் சாதித்து வருகிறார் க்ரிஷ்.

தற்போது, பிக் பாஸ் வீட்டில் ஆறு போட்டியாளர்கள் உள்ள நிலையில் இவர் ஏழாவதாக இணைவாரா இல்லையா என பொறுத்திருந்து பாப்போம்.