கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, வெளிநாடுகளுக்கு சென்று திரும்புபவர்களுக்கு தான் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. அவர்கள் மூலமாகவே மற்றவர்களுக்கு பரவி வருகிறது.

சீனாவில் துவங்கி தற்போது மெல்ல மெல்ல... 125 க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி உள்ளது கொரோனா. மேலும் இதனால் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் லண்டன் சென்று திருப்பிய பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து, அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை தனிமை படுத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது பாலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் மனதை கவரும் விதமாக பல பாடல்களை பாடி, பிரபலமான கனிகா கபூர் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே அவருடைய ரசிகர்களின் ஆவல்.