பல பாலிவுட் திரைப்படங்களில் பாடல்களை பாடி பிரபலமான, பாடகி கனிகா கபூர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். இவர் லண்டனில் இருந்து,  திரும்பி வந்தபோது அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர், லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கனிகா கபூர் கொரோனா தாக்கத்துடன், பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டதால், அவர்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதே போல் கனிகா கபூர்... விருந்தில் கலந்து கொண்ட, தாஜ் ஓட்டல் மூடப்பட்டது.

ஏற்கனவே கனிகா கபூருக்கு இரண்டு முறை கொரோனா சோதனை செய்யப்பட்டு அதில் பாசிட்டிவ் என வந்த நிலையில், மூன்றாவது முறையும் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுள்ளது குறிப்பிடத்தக்கது.