“என்னால் நம்ப முடியவில்லை”... பத்ம பூஷண் விருது குறித்து பாடகி சித்ரா மகிழ்ச்சி... வைரல் வீடியோ..!
அதில் பல மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கலை பாடி ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற‘சின்னக்குயில்’ சித்ராவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் சார்பில் கலை, இலக்கியம், மருத்துவம், சமூக சேவைகளில் சிறந்து விளங்குவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பு ஆண்டில் 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும், 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 10 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இது தான் கல்யாண கலையா?... சிக்கென்ற அழகுடன் பட்டுப் புடவையில் ஜொலிக்கும் வரலட்சுமி...!
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லி பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், பேராசிரியர் சாலமன் பாப்பையா ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பல மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கலை பாடி ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற‘சின்னக்குயில்’ சித்ராவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பீட்டர் பாலை பிரிந்த பிறகு பிக்பாஸ் வனிதாவுக்கு அடித்த ஜாக்பாட்... குவியும் வாழ்த்துக்கள்...!
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அனைவருக்கும் வணக்கம்... இந்திய அரசு எனக்கு பத்ம பூஷண் விருதை அறிவித்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய இசைப்பயணத்தின் 42வது வருடம் இது, இந்த சமயத்தில் கடவுளுக்கும், எனது பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இதற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், ஒலிப்பதிவாளர்கள் என அனைவரையும் இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன். இது என்னுடைய ரசிகர்களின் அன்பு மற்றும் பிரார்த்தனையால் சாத்தியமானது. எனக்கு இந்த விருதை அறிவித்த நம் நாட்டிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என மிகவும் மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் பேசியுள்ளார்.