இந்தச் செய்தியைப் படிக்கும்போது கவிப்பேரரசு வைரமுத்துவின் மனசு என்ன பாடுபடப்போகிறது என்று நினைத்தால் பெருங்கவலையாக இருக்கிறது. அவரை தனது ட்விட்டர் பதிவுகளால் விடாது துரத்தி வந்த பாடகி சின்மயி மிக விரைவில் ட்விட்டரை விட்டே வெளியேறப்போகிறாம். இந்த பகீர் தகவலை சில நிமிடங்களுக்கு முன்னர் அவரே வெளியிட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே ட்விட்டரில் பஞ்சாயத்தை இழுப்பதில் சந்தேகத்துக்கிடமின்றி முதலிடம் வகித்து வந்தவர் பாடகி சின்மயி. சக ட்விட்டர்களிடம் தொடர்ந்து வம்பு வளர்த்து தமிழக அளவில்  பிரபலமாக இருந்த அவர் கவிஞர் வைரமுத்து மீது மி டூ’புகார் கொடுத்தபிறகு ஒலக ஃபேமஸ் ஆனார். அந்தப் பரபரப்பை அப்படியே பற்றிக்கொண்ட அவர் பெண்களுக்கு என்ன ரூபத்தில் அநீதி நடந்தாலும் ட்விட்டர் மூலம் தட்டிக்கேட்க ஆரம்பித்தார். பொள்ளாச்சியில் ஒரு பிரச்சினையா அதற்கு முதல் ஆளாய்ப் பொங்குபவர் சின்மயியாகத் தான் இருக்கும். சிவகாசியில் ஒரு பிரச்சினையா உடனே சீறிப் பாய்வார்.

இந்நிலையில் சில காலமாக அவ்வளவாக ட்விட்டர் பகுதியில் நடமாடாமல் இருந்த சின்மயி, சற்று முன்னர் போட்ட பதிவில்,...எனது நடமாட்டம் இங்கு குறைந்திருக்கும் நிலையில் எனக்கு எதிராகக் கம்பு சுத்திக்கொண்டிருந்த 90 சதவிகித எதிரிகள் காணாமல் போயிருக்கிறார்கள்.அதுவும் நன்மைக்கே. யார் கண்டது நானே கூட இந்த ட்விட்டர் பக்கத்தை விட்டு சீக்கிரமே வெளியேறக்கூடும் என்று பதிவிட்டிருக்கிறார். ஆக இனி தமிழ் சமூகம் கவிஞர் வைரமுத்து குறித்து எந்த அப்டேட்டும் கிடைக்காமல் அல்லாடப்போகிறது.