கோமா நிலைக்கு சென்ற பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இப்போ எப்படி இருக்கிறார்? உடல்நிலை குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த புகழ்பெற்ற பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ-யின் உடல்நிலை குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் புகழ்பெற்ற பாடகியாக வலம் வந்தவர் பாம்பே ஜெயஸ்ரீ. தமிழில் இவரை பேமஸ் ஆக்கிய கவுதம் மேனனின் மின்னலே படத்தில் இடம்பெற்ற வசீகரா பாடல் தான். அப்பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு பாம்பே ஜெயஸ்ரீயின் இனிமையான குரலும் ஒரு காரணமாக இருந்தது. மின்னலே படத்துக்கு பின்னர் பாம்பே ஜெயஸ்ரீக்கு தமிழில் ஏராளமான பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்தது.
குறிப்பாக தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களாக வலம் வரும் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஷ் ஜெயராஜ் போன்றவர்களின் இசையில் ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடி உள்ளார் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு இசைக்கச்சேரிகளையும் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... கமுக்கமாக காதலரை அறிமுகம் செய்தாரா கீர்த்தி சுரேஷ்? - காட்டுத்தீ போல் பரவும் போட்டோ
அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்த பாம்பே ஜெயஸ்ரீ, அங்கு அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வந்தார். அப்போது அவருக்கு திடீரென மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கோமா நிலைக்கு சென்ற பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நலம் தேறிவந்த பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளால் தான் நன்றாக குணமடைந்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாம்பே ஜெயஸ்ரீ. அவரின் இந்த பதிவைப் பார்த்து நிம்மதி பெருமூச்சி விட்ட ரசிகர்கள், விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் பாடல்கள் பாடுமாறு அவருக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... இது சரிப்பட்டு வராது... உஷாராக தீபாவளி ரேஸில் இருந்து விலகிய கார்த்தியின் ‘ஜப்பான்’ - காரணம் என்ன?