பிரபல பாடகர் ஆதித்ய நாராயணன், சந்தோஷத்தை வெளிப்படுத்திய ரசிகரை தாக்கி அவரின் செல்ஃபோனை தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக அறியப்படுபவர் உதித் நாராயணன். இவர் ஹிந்தியில் ஏராளமான பாடல்கள் பாடி இருந்தாலும், தமிழில் திரையுலகிலும் இவரின் பாடல்களுக்கு என ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குறிப்பாக முத்து படத்தில் இடப்பெற்ற குலுவாலிலே, யாரடி நீ மோகினி படத்தில் இடம்பெற்ற எங்கேயோ பார்த்த மயக்கம், நெஞ்சை கசக்கி பிழிச்சி போன்றவளே, என சொல்லி கொண்டே போகலாம்.

இவரை போலவே, இவரின் மகன் ஆதித்ய நாராயணனும் பிரபல பாடகராக உள்ளார். இவர் வாரயிறுதியில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாடல் பாடிக்கொண்டே இருக்கும் போது, ஒரு ரசிகரை தாக்கி, அவரது போனை தூக்கி எறிந்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவ... பலர் தொடர்ந்து தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Suriya: விபத்தில் உயிரிழந்த நற்பணி மன்ற மாவட்ட தலைவர்! வீடு தேடி சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய சூர்யா!

அதாவது சத்தீஸ்கரில் உள்ள ஒரு கல்லூரியில், ஆதித்திய நாராயணனின் இசை நிகழ்ச்சியின் நடந்த போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் முதல் ஏராளமான இசை ஆர்வலர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். ஆதித்ய நாராயணன் ஷாருக்கான் நடித்த 'டான்' படத்திலிருந்து 'ஆஜ் கி ராத்' பாடலைப் பாடிக்கொண்டிருக்கும் போது... ரசிகர் ஒருவர் ஆதித்யாவின் கால்களை தொட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக தெரிகிறது.

Rakul Preet Singh Wedding: காதலரை கரம் பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்! திருமணம் எப்போது? வைரலாகும் பத்திரிக்கை!

இதனால் கோபமடைந்த ஆதித்யா அந்த நபரை தன கையில் இருந்த மைக்கல் தாக்கியதோடு மட்டும் இன்றி, தொலைபேசியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கூட்டத்தின் மீது வீசி எறிந்தார். ஆத்திய நாராயணனின் செயல்பார்வையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் பலர், இவரின் செயலுக்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த ரசிகர் தொந்தரவு செய்திருந்திந்தாலும் இப்படி நடந்து கொள்வது மிகவும் தவறு என சுட்டி காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…