கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ’பேட்ட’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரம் அருகே இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ரஜினி, கலாநிதி மாறன், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திரைப்பட பாடல்களை பொதுமக்கள் வெளியிட்டனர். படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இசைவெளியீட்டு விழா மேடையேறிய சிம்ரனிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் முக்கியமாக சந்திரமுகி படத்தை தவறவிட்டது பற்றி கேட்டதும் சிம்ரனை கண்கலங்க வைத்தது. 

15 வருடங்களுக்கு முன்பு இழந்த வாய்ப்பை பேட்ட திரைப்படத்தில் தான் திரும்ப பெற்றேன். எனக்கு பிறந்த நாள் பரிசாக இந்த வாய்ப்பு கிடைத்தது. எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை என்று கூறினார்.  அப்போது சிம்ரனிடம் ரஜினிக்கு பெஸ்ட் ஜோடி யார் மீனாவா, குஷ்புவா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிம்ரன், இல்லை நான்தான் பெஸ்ட் ஜோடி என்று  உள்மனதிலிருந்து கூறினார். மேலும் ரஜினியின் எல்லா படங்களிலும் நான் அவருக்கு ஜோடியாக நடித்து இருக்க வேண்டும் என்றுதான் என்னுடைய ஆசை.  இந்த நிலையில் பேசிக்கொண்டு இருந்த சிம்ரன் கடைசியாக நடனம் ஆடினார். 

அதுவும் 15 வருடங்களுக்கு முன்பு தான் தவறவிட்ட சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ராரா பாடலுக்கு, வேட்டையன் முன் கோபமாக ஆடும்   சந்திரமுகியாக மாறி ஆடினார். சிம்ரனின் நடனத்தை ரஜினி மெய்மறந்து பார்த்துக் கொண்டு இருந்தார். சிம்ரனின் இந்த நடனம் ஒட்டுமொத்த விழா அரங்கமே அதிர்ந்தது.