பிரசாந்துடன் அந்தகன், விக்ரமுடன் மகான், கார்த்தியுடன் சர்தார், ஆர்யாவுடன் கேப்டன், மாதவனின் ராக்கெட்ரி, அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி என ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சிம்ரன். 

விஜய், சூர்யா, ரஜினி, கமல், அர்ஜுன் , விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தன்மூலம் பிரபலமானவர் சிம்ரன். இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால், தமிழ் சினிமாவின் ராசியான ஹீரோயினாகவும் வலம் வந்தார். கடந்த 2003-ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்ட பின் சினிமாவை விட்டு விலகிய சிம்ரன், ரஜினியின் பேட்ட படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகை சிம்ரன், கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இதைவைத்து. சூர்யாவுக்கு அம்மாவாக நடித்த நீங்கள், விஜய்க்கும் அம்மாவாக நடிப்பீங்களா என சமீபத்திய பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த சிம்ரன், நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடிக்க சொன்னால் நிச்சயம் நடிக்க மாட்டேன். அதை அவரது ரசிகர்களும் விரும்பமாட்டார்கள் என தெரிவித்துள்ளார். 

தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் சிம்ரன், பிரசாந்துடன் அந்தகன், விக்ரமுடன் மகான், கார்த்தியுடன் சர்தார், ஆர்யாவுடன் கேப்டன், மாதவனின் ராக்கெட்ரி, அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.