தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'மாஸ்டர்' திரைப்படம் அடுத்த மாதம், வெளியாக உள்ள நிலையில், தற்போது மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா, மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு, மிகவும் பாதுகாப்புடன் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. காரணம் பிகில், மற்றும் சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில், ரசிகர்கள் கூட்டம் கூடியதால் சில பல பிரச்சனைகள் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டு படுத்துவதற்காக போலீசார் ரசிகர்கள் மீது லேசான தடியடி தடத்தியதால் சிறு சலசலப்பும் ஏற்பட்டது.

இதனால், இம்முறை எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்பதில், படக்குழுவினர் மிகவும் கவனமாக உள்ளது மட்டும் இன்று, இசை வெளியீட்டு விழாவை, சென்னை லீலா பேலஸில் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி சரியாக 6 : 30 மணிக்கு சன் டிவியில், நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. நிகழ்ச்சியை சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும், நடந்து வருகிறது.

அந்த வகையில், நடிகை சிம்ரன் ஒரு பாடலுக்கு செம்ம டான்ஸ் ஆடி ரசிகர்களை மட்டும் இன்று பிரபலங்களையும் வியக்க வைத்துள்ளார். இது குறித்த சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.