கோலிவுட் சினிமாவில் புரியாத புதிராக இருப்பவர் நடிகர் சிம்பு. நன்றாக 2 படங்கள் ஓடினால், 3வது பட படுத்துவிடும், இல்லை இவர் ஷூட்டிங்கிற்கு போகாமல் படத்திற்கு மூடுவிழா நடத்திவிடுவார். கால்ஷீட் சொதப்பல் காரணமாக வெங்கட் பிரபு இயக்க இருந்த மாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்தது. இதனையடுத்து பல கட்ட பஞ்சாயத்துகளுக்குப் பிறகு மனம் திருந்தி சிம்பு, அப்படத்தில் சரியாக நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார். அப்படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் பார்ட்டி, கூத்து கொண்டாட்டம் என்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த சிம்பு, இனியும் இப்படியே இருந்தால் நமக்கு எண்ட் கார்டு போட்டு விடுவார்கள் என்ற ஞானம் பெற்று 40 நாள் விரதம் மேற்கொண்டு சபரிமலை மாலை போட்டார். 

சில மாதங்களுக்கு முன்பு பெரியார் குத்து என்ற பாடலை வெளியிட்ட சிம்பு இப்படி திடீரென மாறியது ஏன் எனத் தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். ஆனால் விடப்பிடியாக விரதம் இருந்த சிம்பு, நேற்று இருமுடி கட்டி சபரிமலைக்கு பயணமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த ஆன்மிக பயணம் முடிய 10 நாட்கள் ஆகும் என்றும், அதன் பின்னர் சிம்பு சினிமாவில் முழு கவனம் செலுத்துவார் என்றும் அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பும் சிம்பு , அடுத்ததாக வெங்கட் பிரபுவின் மாநாடு, ஹன்சிகாவுடன் மகா போன்ற படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.