நடிகர் சிம்பு விறுவிறுப்பாக நடித்து வந்த, 'மாநாடு' படத்திற்காக தற்போது தன்னுடைய உடல் எடையை, இந்த லாக் டவுன் நேரத்தில் சத்தமில்லாமல் குறைத்துள்ளாராம். 

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்து வந்த திரைப்படம் 'மாநாடு'. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு முழுமையாக நிறுத்தப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது அதிக பட்சம் 100 பேருடன் படப்பிடிப்பு நடத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் மீண்டும் அனுமதி அளித்ததை அடுத்து ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு ’மாநாடு’ படத்துக்கு கடின உடல் பயிற்சிகள் செய்து,  கிட்ட தட்ட 100 கிலோவிலிருந்து  அவர் தற்போது 21  கிலோ உடல் எடையை குறைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.  கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சில படங்களில், கொழுக் மொழுக் என காட்சியளித்த சிம்பு, இந்த படத்தில்... செம்ம ஃபிட்டாக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு அவரது தோற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

’மாநாடு’ படத்தை முடித்துவிட்டு ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஒரு கன்னட ரீ-மேக் படத்தில் சிம்பு நடிப்பார் என்றும் மேலும் இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.