கடைசியாக சிம்பு நடிப்பில், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் "வந்தா ராஜாவைத்தான்' வருவேன் படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான இது, கடைசியில் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது.

இதை தொடந்து லண்டன் பரந்த சிம்பு, எடை குறைப்பு சிகிச்சைகள் மேற்கொண்டு, ஸ்லிம் பிட்டாக இந்தியாவிற்கு வந்து இறங்கினார். 

தற்போது ஹன்சிகா நடிக்கும், 'மஹா' படத்திலும், கெளதம் கார்த்தியுடன் இணைந்து ரீமேக் படமொன்றில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தி, உருவாகி வரும் 'மாநாடு'  படத்தின் படப்பிடிப்பிலும் பிஸியாகியுள்ளார். 

இந்நிலையில் 'மாநாடு' , படப்பிடிப்பில் எடுத்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.