கால்ஷீட் சொதப்பல் காரணமாக தமிழ் சினிமாவை விட்டே கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்தார் சிம்பு.  வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த மாநாடு படம் கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்ட பிறகு சிம்பு தமிழ் சினிமாவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டார். அவரால் பாதிக்கப்பட்ட மற்ற தயாரிப்பாளர்களும் ஒன்று சேர்ந்து அவரை புதுபடங்கள் எதிலும் கமிட் ஆக விடாமல் முடக்கும் வேலைகளில் ஈடுபட்டனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. அவைகளுக்கு பதில் சொல்ல டி.ஆர். விரும்பாத சூழலில் ஒரு சில கூட்டங்களில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கலந்துகொண்டார்.

இதையும் படிங்க: சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது?... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....!

பல கட்ட பஞ்சாயத்திர்கு பிறகு மாநாடு படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கும் நல்ல படியாக நடைபெற்று வந்தது. இந்த படத்தில் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, கல்யாணி ப்ரியதர்ஷன்இயக்குநர் பாராதிராஜாவின் மகனான மனோஜ், பிக்பாஸ் பிரபலம் டோனி, ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா  உட்பட மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்து வந்தது. 

இதையும் படிங்க: அம்மாடியோவ்! முடியை வைத்து முன்னழகை மறைத்த இலியானா... பெருமூச்சு விட்ட ரசிகர்கள்...!

தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா பிரச்சனையில் இருந்து மீண்ட பிறகே மாநாடு படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா வைரஸ் தனது கொடூர முகத்தை காட்டி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் சென்னையில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றி வந்த கடலூரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனாவிற்கு சிகிச்சை எடுத்து வரும் ஆனந்தன் சிம்புவின் தீவிர ரசிகராவார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட சிம்பு உடனடியாக ஆனந்தனுக்கு போன் செய்து ஆறுதல் கூறியுள்ளார். உடனடியாக குணமடைந்து விரைவில் வீடு திரும்புவீர்கள் கவலை வேண்டாம் என நம்பிக்கை கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: கண்களில் கவர்ச்சி ததும்ப கிளாமர் போஸ்... “மாஸ்டர்” நாயகியின் தாராளத்தை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக சிம்பு குட்டிக்கதை ஒன்றையும் கூறியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட சிம்பு ரசிகர்கள் மனம் நெகிழ்ந்து போயுள்ளனர். அதேபோல் ஆனந்தன் குணமடைய வேண்டியும் உருக்கமான பிரார்த்தனைகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.