இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு சிம்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செம்ம வைரலாகி வருகிறது. 

பொங்கல் விருந்தாக சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் சிம்பு நடத்து வருகிறார். இதையடுத்து ‘சில்லுன்னு ஒரு காதல்’ பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கும் கன்னடத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பத்து தல’ படத்தில் நடிக்க உள்ளார். 

இதையடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ள ஒரு படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார். இப்படி கேரியரில் சிம்பு செம்ம பிசியாக இருந்தாலும், அவருடைய ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே கவலை சிம்புவுக்கு திருமணம் எப்போது என்பது தான். நயன்தாரா, ஹன்சிகா என அடுத்தடுத்து காதல் கிசுகிசுக்களில் சிக்கிய சிம்பு, தற்போது அப்பா, அம்மா ஓகே சொல்லும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார். அதற்காக டி.ராஜேந்தரும், உஷா ராஜேந்தரும் தீவிரமாக பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டுள்ளதும் அனைவரும் அறிந்ததே. 

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு சிம்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செம்ம வைரலாகி வருகிறது. சக நடிகரும், சிம்புவின் நெருக்கமான நண்பருமான மகத்தின் செல்ல நாயிடம் பேசுவது போன்ற வீடியோவில், எனக்கு ஒரு பொண்ணு பாரு... நீ ஒரு பொண்ணு. இனி தான் நீ ஒரு பையனை மீட் பண்ணனும் . அந்த பையனோட உனக்கு சில விஷயங்கள் எல்லாம் நடக்கணும். அதுக்கு எனக்கு முதலில் கல்யாணம் நடக்கணும். நான் மட்டும் தனியா இருக்கேன். நீ மட்டும் ஜாலியா இருக்குறது நியாயம் இல்ல. என் கஷ்டம் உனக்கு புரியுதா இல்லையா?... எனக்கு அந்த கடவுள் ஒரு பெண்ணை கொடுப்பாரு என சிம்பு பேசியுள்ள கலகலப்பான் வீடியோ இதோ.... 

View post on Instagram