vendhu thanindhathu kaadu : ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்துக்கு போட்டியாக சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீசாக உள்ளது.

மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கி உள்ளார். ஏற்கனவே அவர்கள் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வெந்து தணிந்தது காடு படம் மூலம் அவர்கள் மூன்றாவது முறையாக இணைந்துள்ள்னர்.

இதையும் படியுங்கள்... அட்லீயின் ஜவான் நிச்சயம் 1000 கோடி அடிக்கும்...வாழ்த்து சொன்ன தொகுப்பாளினி டிடி...

இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சிந்து இதானி நடித்துள்ளார். மேலும் நடிகை ராதிகா சரத்குமாரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள்... "ஈகிள் இறங்கியது "...விக்ரம் கமலின் வேறலெவல் வொர்கவுட் வீடியோவை பகிர்ந்த இயக்குனர்!

வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் சிம்பு அமெரிக்கா சென்றதால், இப்படத்தின் டப்பிங் பணிகள் தடைபட்டுள்ளது. அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் டப்பிங் பேசி முடிப்பார் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்புக்கு இதான் காரணம்… உறவினர்கள் கொடுத்த அதிர்ச்சி தகவல்!!

Scroll to load tweet…

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். அன்றைய தினம் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படமும் ரிலீசாக உள்ளது. அப்படத்துக்கு போட்டியாக சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.