நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்புக்கு இதுதான் காரணம்… உறவினர்கள் கொடுத்த அதிர்ச்சி தகவல்!!
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நிலை குறித்த அவரது உறவினர்கள் அளித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நிலை குறித்த அவரது உறவினர்கள் அளித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் நுரையீரல் செயல்படாமல் எக்மோ சிகிச்சையில் இருந்துள்ளார். வித்யாசாகர், பின்னர் எம்ஜிஎம் மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையும் படிங்க: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு... அதிர்ச்சியில் திரையுலகம்!!
இந்த நிலையில் இன்று இரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுக்குறித்து அவரது உறவினர்கள் வட்டாரத்தில் கேட்டபோது, வித்யாசாகருக்கு ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு அவருக்கு இருந்தது. அது இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கக் கூடிய பிரச்னை. அதாவது புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிற போது உண்டாகக் கூடிய நோய். பெங்களூருவில் அவருடைய வீட்டுக்கு அருகே நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது முதல் ஹீரோவுடன் மீனா!
அதனால் அலர்ஜி ஏற்பட்டு அவருக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டது. ஏற்கெனவே இந்தப் பாதிப்பு இருந்த நிலையில் கொரோனா வைரஸாலும் அவர் பாதிக்கப்பட்டார். இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்து இன்று இறந்துட்டார் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... Poo Ramu Death : மிகச்சிறந்த நடிகர்... என்னுடன் தான் கடைசியாக நடித்தார்- பூ ராமு மறைவால் கலங்கிய சூப்பர்ஸ்டார்
அவ்வப்போது தன்னைப் பற்றிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் மீனா தனது முதல் ஹீரோ ராஜேந்திர பிரசாத்துடன் ஒரு புதிய படத்திற்காக மீண்டும் இணைந்திருப்பதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். படத்தில் அவர் இருவரும் ஒரு வயதான தம்பதியை சித்தரித்து வெளியிட்டிருந்தார். நடிகை மீனா கதாநாயகியாக நடித்த முதல் படம் தெலுங்கில் ராஜேந்திர பிரசாத் ஹீரோவாக நடித்த ‘நவயுகம்’. இந்தப் படம் 1990 இல் வெளியானது. அதன் பிறகு அவர் தமிழில் 'ஒரு புதிய கதை' படத்தில் புதுமுகம் பிரபுராஜ் ஜோடியாக நடித்தார்.