Arasan Promo Video Released : சிம்பு நடிப்பில் உருவாகி வரும் அரசன் படத்தின் புரோமோ வீடியோ இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் நாளை யூடியூப்பில் வெளியிடப்படுகிறது.

சிம்பு அரசன் புரோமோ வீடியோ:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் தான் அரசன். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு முதல் முறையாக இந்தப் படத்தில் இணைந்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி முதல் முறையாக சிம்பு படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆம், முதல் முறையாக சிம்பு மற்றும் அனிருத் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது. இன்று இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாள் என்பதால், அவருக்கு பிறந்தநாள் பரிசாக அரசன் படத்தின் புரோமோ வெளியிடப்பட்டது. கலைப்புலி எஸ் தாணு இந்தப் படத்தை தயாரிக்க்கிறார்.

Scroll to load tweet…

வடசென்னையை போன்று மற்றொரு சம்பவத்தை மையபடுத்தி எடுக்கப்பட்டுள்ளது. எப்போதுமே ஒரு புரோமோவோ, டீசரோ, டிரைலரோ, சாங்கோ எதுவாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். ஆனால், சிம்புவின் அரசன் படத்திற்கு வித்தியாசமான முறையில் திரையரங்குகளில் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்தது. அதுமட்டுமின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான சிம்புவின் தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் அப்படியே பிரமித்து போனார்கள். இந்த நிலையில், இன்று வெளியான புரோமோ வீடியோவில் சிம்பு, கையில் அரிவாளுடன் ரத்தக் கறையுடன் இருக்கிறார்.

ஒரு ஈ, காக்கா கூட வரக்கூடாது, அப்புறம் நான் மனுசனாவே இருக்கமாட்டேன் – இளையவர் சக்திவேல் ஆவேஷம்!

மற்றொரு காட்சியில் சிம்புவிற்கு எதிராக கிட்டத்தட்ட 10 பேர் சாட்சி சொன்ன நிலையில், அவர் கோர்ட் படியேறி ஓடி வருகிறார். மேலும், அவர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதில் கூண்டில் ஏறி நின்று இந்த கொலைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நான் கேப்டன் பிரபாகரன் படம் பார்த்துவிட்டு வருகிறேன். எனக்கு எதிரான சாட்சி சொன்னவர்கள் பொய் சொல்கிறார்கள். அக்யூஸ்ட பிடிக்க முடியல என்று என்னை கொண்டு ஸ்டேஷனில் உட்கார வைத்துவிட்டார்கள்.

Scroll to load tweet…

நான் நிரபராதி அம்மா என்று சிம்பு டயலாக் பேசுவதைத் தொடர்ந்து வடசென்னை உலகத்திலிருந்து ஒரு சொல்லப்படாத கதை என்று டைட்டில் போடப்படுகிறது. இதே போன்று மற்றொரு புரோமோவும் வெளியானது. மேலும், அனிருத்தின் இசையில் ஒரு தீம் மியூசிக்கும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த மற்றொரு புரோமோ வீடியோவில் சிம்பு மற்றும் நெல்சன் திலீப்குமார் இடையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதில், யார் கிட்ட வந்து என்ன மாட்டி விட்டிருக்க என்று நெல்சன் டயலாக் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது.

மெட்டா AI உடன் இணைந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்!

இந்த நிலையில் தான் இந்த புரோமோ வீடியோ குறித்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறியிருப்பதாவது: படம் முன்னோட்டம் முந்துகிறது. வருங்காலம் வரவேற்க போகிறது. இந்தப் படம் சிறப்பான படமாக அமையும். இவரைத் தொடர்ந்து பேசிய மிஷ்கின் கூறியிருப்பதாவது: வெற்றிமாறன் எப்போது வித்தியாசமான முறையில் படம் எடுக்க கூடியவர். அவரது பிலிம்மேக்கிங் புதிதாக இருக்கும். சிம்பு மற்றும் வெற்றி காம்போ சிறப்பாக இருக்கும். கதையும் சுவாரஸ்யமாக இருக்கும். இந்தப் படம் இந்தியாவின் மிகப்பெரிய நடிகராக சிம்பு வருவார் என்பதற்கு சான்று என்று கூறியுள்ளார்.

மகேஷ், பிரபாஸுடன் சிரஞ்சீவி; 21 வருட அரிய புகைப்படம் வைரல்!