நடிகர் சிம்பு என்கிற சிலம்பரசன் திரையுலகில் நுழைந்து 35 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளதைக் கொண்டாடும் வகையில் 500 அடி நீளத்துக்கு வாழ்த்து போஸ்டர் ஒட்டி மதுரை மக்களை திகைப்பில் ஆழ்த்தினர்.

தற்போது 36 வது அகவைவில் இருக்கும் 1984ம் ஆண்டு 1985ம் ஆண்டே, அதாவது ஒரு வயது ஆகும்போதே தனது தந்தை டி.ஆர் இயக்கித் தயாரித்த ‘உறவைக் காத்த கிளி’படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது வலது காலை எடுத்து வைத்தார். அடுத்து ‘மைதிலி என்னைக் காதலி’,’எங்க வீட்டு வேலன்’ போன்ற ஏகப்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே அட்ராசிட்டி புரிந்த அவர் 2002ல் ‘காதல் அழிவதில்லை’படத்தின் மூலம் வயதுக்கு வந்தார்.

அடுத்து இந்த 17 ஆண்டுகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் சிம்பு அடிக்கடி நடிககளுடன் கிசுகிசுக்களில் அடிபடுவது, ஷூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு சொன்ன நேரத்துக்கு வராமல் சொதப்புவது, அல்லது மொத்தமாகவே டிமிக்கி கொடுப்பது போன்ற காரணங்களால் சொல்லிக்கொள்ளும்படி ஹிட்டுகள் கொடுக்கமுடியாமல் தவித்துவருகிறார். தற்போது தனது முன்னாள் காதலி ஹன்ஷிகா மோத்வானிக்காக ‘மஹா’படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துவரும் அவர் கைவசம் ஒரு கன்னட ரிமேக்கும், வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’படங்களும் உள்ளன. அவரது தந்தை டி.ராஜேந்தர் இயக்கத்தில் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘மச்சி’ என்ற படத்திலும் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்றும் மிரட்டுகிறார்கள்.