’பெரிய தல’களுடன் மோதினால்தான் சினிமாவில் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும் என்று நினைத்தாரோ என்னவோ, தனது மானசீக ஸ்டார்களான ரஜினி, அஜீத் இருவரின் படமும் ரிலீஸாகும் பொங்கலுக்கே தனது அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும் அதிரடி முடிவை எடுத்திருக்கிறார் நடிகர் சிம்பு.

இடையில் மிகவும் டல்லடித்த சிம்புவின் சினிமா கேரியர் மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ ரிலீசுக்குப் பின்னர் இந்த நடிகர் இன்னும் கோடம்பாக்கத்தில்தான் இருக்கிறார் என்று நினவூட்டியிருக்கிறது. இந்நிலையில் சுந்தர்.சி.யுடன் அவர் சமீபத்தில் கைகோர்த்த படத்துக்கு இரு தினங்களுக்கு முன்புதான் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மட்டுமன்றி அப்பெயர் அறிவிப்பு விளம்பரங்களில் படம் பொங்கல் ரிலீஸ் என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி மற்றும் அஜீத் ஆகிய இருவருக்குமே தரை லெவல் ரசிகர் சிம்பு. இருவரது படங்களையுமே முதல் நால் ஷோ பார்க்காமல் சிம்புவின் நால் நகராது. தற்போது மனிதர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அஜீத்தின் ‘விஸ்வாஸம்’, ரஜினியின் ‘பேட்ட’ ஆகிய இரு படங்களும் ரிலீஸாகும் பொங்கல் தினத்தன்றே தனது அடுத்த படமான ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்.

ஒருவேளை மேற்படி இருபடங்களோடு மோதித்தோற்றால்... அதாவது இப்ப இண்டஸ்ட்ரியில அஜீத், ரஜினிக்கு அப்புறம்  இந்த சிம்புதான் என்று கிளம்பினாலும் கிளம்புவார்.