இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் முழுக்க முழுக்க கிராமத்து கதையான ஈஸ்வரன் படத்தில் சிம்பு நடித்து வந்தார். திண்டுக்கல்லில் கடந்த சில வாரங்களாக ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், முழு மூச்சுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிம்பு நடித்து முடித்துவிட்டார். படத்தின் டிரெய்லரை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து விட்டதால், தற்போது படக்குழு  போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படு தீவிரமாக இறங்கியுள்ளனர். இவர் தன்னுடைய டப்பிங் பணியையும் சிம்பு முடித்துக் கொடுத்துவிட்டார்.பொங்கல் விருந்தாக ஈஸ்வரன் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது முழு வீச்சுடன் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சிம்பு, ஈஸ்வரன் படத்தை முடித்த கையோடு ரேஸ்ட் கூட எடுக்காமல் மாநாடு ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். 

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 

தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் கடந்த சனிக்கிழமை வெளியாகின. அதை பார்த்த ரசிகர்கள் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார் போன்று என்று பேசத் துவங்கினார்கள். இந்நிலையில் இது குறித்து மாநாடு படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி விளக்கம் அளித்துள்ளார். அதாவது சிம்பு மாநாடு படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை என்றும், ஆனால் இந்த படம் மங்காத்தா அளவிற்கு வெங்கட் பிரபுவிற்கு சிறந்த கம்பேக் படமாக அமையும் என்றும் சூப்பர் தகவல்களை சொல்லி சிம்பு ரசிகர்களை குஷியாக்கியுள்ளார்.