மாநாடு படத்தின் வெற்றிவிழாவை அண்மையில் படக்குழு கொண்டாடியது. இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். தன் தந்தையை போலவே நடிப்பு, இசை, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வரும் சிம்பு, தனது கடின உழைப்பால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு பின் குறிப்பிடத்தக்க வெற்றியை கொடுக்க முடியாமல் தவித்து வந்த சிம்புவுக்கு, சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.

இப்படம் மூலம் சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்துள்ள சிம்புவுக்கு, தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் அதிகரித்துள்ளது. மாநாடு படத்தின் வெற்றிவிழாவை அண்மையில் படக்குழு கொண்டாடியது. ஆனால் இதில் சிம்பு மட்டும் கலந்துகொள்ளவில்லை. வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங்கில் இருந்ததால் அவரால் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக மீண்டும் ஒரு வெற்றிவிழாவை நடத்த சிம்பு திட்டமிட்டுள்ளாராம். வருகிற ஜனவரி மாதம் 6-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள இந்த விழாவில் சிம்புவின் ரசிகர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு பட மிகப்பெரிய வெற்றியடைய காரணமாக இருந்த ரசிகர்களை கவுரவிக்கும் விதமாக அவர் இந்த விழாவை நடத்துகிறாராம்.