simbu pasted the poster of his fan in thenampettai
கண்ணீர் மல்க கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு..! ஏன் தெரியுமா ..? தேனாம்பேட்டையில் நேற்று...
பேனர் வைக்கும் தகராறில் தன்னுடைய தீவிர ரசிகனான மதன் வெட்டி கொள்ளப்பட்டு உள்ளார்
தேனாம்பேட்டை குடிசை பகுதியை சேர்ந்தவர் மதன். இவர் ஒரு பாடகர். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர்
சிம்பு ரசிகர் மன்றத்திலும் உறுப்பினராக இருந்து பணியாற்றிவர்.
இந்நிலையில் கடந்த வாரம் ஒரு திருமணத்திற்காக பேனர் வைக்கும் போது அந்த பகுதி இளைஞருக்கும், மதனுக்கும் தகராறு ஏற்பட்டதில், மதன் அந்த இளைஞர்களால் வெட்டி கொல்லப்பட்டர்
அப்போது நடிகர் சிம்பு தான் நடித்து வரும் செக்க சிவந்த வானம் என்ற படபடப்பிடிப்புக்க துபாயில் இருந்தார். அப்போது இந்த செய்தியை சிம்புக்கு தெரிவிக்கப் பட்டு உள்ளது.
உடனே பெரும் அதிர்ச்சிக்கு ஆளான நடிகர் சிம்பு, அங்கிருந்து தனது அப்பாவுக்கு போன் செய்து ,மதன் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற வைத்தார்.
பின்னர், இந்தியா வந்ததும் நேற்று இரவு தேனாம்பேட்டையில் தனது ரசிகனின் அஞ்சலை போஸ்டரை சுவரில் ஒட்டினர்.
தனக்காக பேனர் வைக்க நினைத்த ரசிகனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைக்கும் நிலை வந்துவிட்டததே என மிகவும் கலங்கி உள்ளார் சிம்பு. சமீபத்தில் சிம்புவின் நடத்தையில் பல மாற்றங்கள் காணப்பட்டு வரும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் மூலம் மேலும் மேலும் சிம்புவை ஒரு புதிய கோணத்தில் மக்கள் பார்கின்றனர்.
