சிம்புவின் அடுத்த படத்தை ஹாலிவுட்டில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.

சிம்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தில் “பாடல்கள் இல்லை, இடைவேளை இல்லை. பாப்கார்ன், பாத்ரூம் என அனைத்தையும் படத்துக்கு முன்னால் முடித்துவிடுங்கள். செப்டம்பர் 2017 வெளியீடு” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

இந்தப் படம் குறித்து சிம்பு தரப்பில் “அடுத்தப் படம் குறித்து எந்தவொரு தகவலையும் சிம்பு எங்களிடம் தெரிவிக்கவில்லை. தனியே உட்கார்ந்து முழு கவனத்துடன் திரைக்கதை அமைத்து வருகிறார்.

விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும். மேலும், இப்படத்தை ஹாலிவுட்டிலும் வெளியிட சிம்பு திட்டமிட்டு இருக்கிறார். ஆனால், அவர் எந்த மாதிரி திட்டமிட்டுள்ளார் என்பதை விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடுவார்” என்று தெரிவித்தனர்.

அடுத்ததாக சிம்பு இயக்கி, நடித்து ஹாலிவுட்டில் வெளியாகவுள்ள படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்பது மட்டுமே தற்போதைக்கு கிடைத்த தகவல்.