simbu next album song is periyaar kuthu

நடிகர் என்பதையும் தாண்டி, ஆடல், பாடல், இசை, என தன்னுடைய தந்தை டி.ஆர் போலவே பல்வேறு திறமைகளை கொண்டவர் நடிகர் சிம்பு. அவ்வப்போது தனிப்பாடல்கள் பாடி வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது 'பெரியார் குத்து' என்ற பெயரில் புது பாடல் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாடலாசிரியர் மதன் கார்க்கி பாடல் வரிகளில், ரமேஷ் தமிழ்மணி இசையில் உருவாகவுள்ள இந்த பாடலை சிம்பு பாடவுள்ளதாகவும், இந்த ஆல்பத்தை தீபன் பூபதி மற்றும் ரதீஷ்வேலு ஆகியோர் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்பு விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பை பற்றிய சம்பவங்களும் இந்த பாடலில் இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.