கடந்த சில வருடங்களாக சிம்பு படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது, இதனிடையே சில மாதங்களுக்கு முன் பல சிக்கல்களை தாண்டி வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படம் திரும்பவும் சிம்புவுக்கு வெற்றி படமாக அமைந்து.

தற்போது பிரபல நிறுவனம் ஒன்று 2016ம் ஆண்டில் மிகவும் விரும்பத்தக்க ஆண் யார் என்ற கருத்துக்கணிப்பு நடந்தது. 

அதில் 2015ம் ஆண்டு 17ம் இடத்தில் இருந்த சிம்பு தற்போது 2016ம் ஆண்டில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தை சிவகார்த்திகேயனும், மூன்றாவது இடத்தை தனுஷும் பிடித்துள்ளனர்.

இதனால் சிம்புவை பலரும் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் சிம்புவை வைத்து AAA படத்தை இயக்கிவரும் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சிம்புக்கு வாழ்த்து கூறியிருந்தார். 

அதில் அதோடு சிங்க நடைபோட்டு சிகரத்தை ஏறு சூப்பர்ஸ்டார் என்று டுவிட் செய்துள்ளார்.