கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் சிம்புவின்  தோற்றத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகினர். 

சிம்பு என்றாலே சிக்கல் என்று சினிமா வட்டாரத்தில் நக்கலடித்த காலங்கள் உண்டு. சரியான நேரத்துக்கு வரமாட்டார், டப்பிங் பணிகளை கிடப்பில் போட்டுவிடுவார், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவார் என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. சமீபத்தில் கூட சிம்புவிடம் அட்வான்ஸ் கொடுத்தோம், படத்தை நடிக்காமல் ஏமாற்றி வருகிறார் என சில தயாரிப்பாளர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தனர். 

இதனால் சிம்பு நடிக்கும் படங்களில் பங்கேற்க வேண்டாமென பெப்சி தொழிலாளர்கள் சங்கத்திடம், தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால் ஐசரி கணேஷன் அனுமதி பெற்றதால் படப்பிடிப்பில் பங்கேற்றதாக பெப்சி தரப்பு கூறிவருகிறது. சிம்பு பட பஞ்சாயத்தால் கடைசியில் பெப்சியும், தயாரிப்பாளர்கள் சங்கம் முட்டிக்கொண்டு நிற்கிறது.

கதை இப்படியிருக்க சின்சியாரிட்டிக்கு மறு பெயரே எஸ்.டி.ஆர். தான் என்பது போல் மாஸான போட்டோ ஒன்றை சிம்பு வெளியிட, அதைப் பார்த்த ரசிகர்கள் பட்டாளம் தான் நிலை குலைந்து போயுள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் சிம்புவின் தோற்றத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகினர். தற்போது அந்த கெட்டப்புக்கு முன்னதாக சட்டை இல்லாமல் எடுத்த போட்டோவை சிம்பு சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்க்கும் ரசிகர்களோ ஏன் சிம்பு இப்படியெல்லாம் கஷ்டப்படுறீங்க என வருந்துகின்றனர். மிகவும் உடல் எடை குறைந்து பார்க்கவே பரிதாபமாக இருக்கும் சிம்புவின் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.