நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு தன்னுடைய 48வது படத்தை நடிப்பதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்த வேற லெவல் ப்ரோமோ ஒன்றும் வெளியாகியுள்ளது. 

நடிகர் கமலஹாசன் மற்றும் சிம்பு இருவரும் இணைய உள்ளதாக, கோலிவுட் திரையுலகில் ஒரு தகவல் பரவி வந்த நிலையில், இன்று மாலை 6:30 மணிக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டபோது, பலரும் இது சிம்பு நடிக்கும் படத்தின் அறிவிப்பாக தான் இருக்கும் என கூறி வந்தனர்.

இந்நிலையில், சற்று முன்... நடிகர் சிம்பு கமலஹாசன் தயாரிப்பில் தன்னுடைய அடுத்த படத்தை நடிப்பதை உறுதி செய்துள்ளார். இது குறித்த புரோமோ ஒன்றும் வெளியாகி உள்ளது. இந்த புரோமோவில் இதில் பிளட்டன் அண்ட் பேட்டில் என்கிற கேப்ஷனுடன், நடிகர் சிம்பு... கமலஹாசன் தயாரிப்பில் நடிக்க உள்ள வெளியாகியுள்ளது.

பலவிதமான குந்தவை கெட்டப்பில் த்ரிஷா.! வீடியோவுடன் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' லிரிக்கல் பாடல் அப்டேட்!

இந்த படத்தை மலையாள நடிகர் துல்கர் சல்மானை வைத்து 'கண்ணும் கண்ணும்' கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ரோமோ மிரட்டலாக உள்ளதால் இது ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்குமோ? என்று சிம்பு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார். விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.

இப்படி சொன்னது ஒரு குத்தமா? காஜலை வம்புக்கு இழுத்து பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்! கொஞ்சம் ஓவராதான் போறாரோ..!

Scroll to load tweet…